4 தொகுதிகளில் 1,647 வாக்குச்சாவடிகள்


4 தொகுதிகளில் 1,647 வாக்குச்சாவடிகள்
x
தினத்தந்தி 26 March 2021 3:43 PM GMT (Updated: 26 March 2021 3:43 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலுக்காக 1,647 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலுக்காக 1,647 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
தேர்தல் பணி
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. 
மாவட்டத்தில் பரமக்குடி தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 381 வாக்காளர்களும், திருவாடானை தொகுதியில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 875 வாக்காளர்களும், ராமநாதபுரம் தொகுதியில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 372 வாக்காளர்களும், முதுகுளத்தூர் தொகுதியில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 912 வாக்காளர்களும் மற்றும் 4 தொகுதியில் படைபணி உள்ளிட்ட பணியாளர் வாக்காளர்கள் ஆயிரத்து 619 பேர் என மொத்தம் 11 லட்சத்து 59 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 65 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர்.
வாக்குச்சாவடிகள்
மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக பரமக்குடி தனி தொகுதிக்கு 302 வாக்குச்சாவடிகளும், திருவாடானை தொகுதியில் 346 வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் தொகுதியில் 336 வாக்குச்சாவடிகளும், முதுகுளத்தூர் தொகுதியில் 385 வாக்குச்சாவடிகளும், புதிதாக கொரோனாவிற்காக சேர்க்கப்பட்ட 278 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,647 வாக்குச்சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணைய உத்தரவின்படி முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Next Story