எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அ.தி.மு.க வேட்பாளர் செ.தாமோதரன் பெருமிதம்


எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை  அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அ.தி.மு.க வேட்பாளர் செ.தாமோதரன் பெருமிதம்
x
தினத்தந்தி 27 March 2021 12:00 PM IST (Updated: 26 March 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

கிணத்துக்கடவு,

தேர்தல் நாள்  நெருங்கிவருவதால்  வேட்பாளர் செ.தாமோதரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் நேற்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட போத்தனூர் பகுதியிலுள்ள  கணேசபுரம், முத்துநகர் ,காந்திஜி ரோடு ,விநாயகர் கோவில் வீதி உள்ளிட்ட  அனைத்து  பகுதிகளில் வீதி,வீதியாக வேட்பாளர் செ.தாமோதரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 3முறையாக கிணத்துக்கடவு தொகுதியாக  எம்.எல்.ஏவாக பணியாற்றியுள்ளேன். கிணத்துக்கடவு தொகுதி சீரமைப்பின் போது இந்த தொகுதியில் ஏற்கனவே 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன்.இந்த பகுதியில் என்ன பிரச்சனை என்பது எனக்கு நன்றாக தெரியும் ஏற்கனவே இந்த பகுதிக்கு ஏராளமான வளர்ச்சி பணிகளை  மேற்கொண்டுள்ளேன்.இந்த பகுதிகளில் ஒரு சில வேலைகள் பாக்கியுள்ளது எனக்கூறினார்கள். இந்த தேர்தலில் மீண்டும் நான்  வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவுடன் இந்த பகுதியில்  உள்ள விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் .தற்போது எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அதன்படி குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் ,கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி ,கேபிள் டிவி கட்டணம்இலவசம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை  வாய்ப்பு , ஒவ்வொரு ரேசன்கார்டிற்கும் வாஷிங் மெஷின் என எண்ணற்ற பல  திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில்  அறிவித்துள்ள  திட்டங்கள் உங்களுக்கு விரைந்து கிடைக்க ஆதரிப்பீர் இரட்டை இலை சின்னத்தில் என்றார் .வேட்பாளர் செ.தாமோதரனுடன் .எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ ,போத்தனூர் பகுதி கழக செயலாளர் ரபிக், மதுக்கரை பேரூராட்சி கழகச் செயலாளர் சண்முகராஜா ,மாவட்ட விவசாயி அணி செயலாளர் மகாலிங்கம், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்  வசந்தராஜா ,மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் குறிச்சி மணிமாறன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் குறிச்சி மரியா, போத்தனூர் பகுதி கழக அம்மா பேரவை செயலாளர் வேணுகோபால், போத்தனூர் பகுதி வர்த்தக அணி செயலாளர் சரவணன், போத்தனூர் பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செல்வகுமார் ,வட்டக் கழக செயலாளர்கள் சாந்தி  பேச்சிமுத்து, ஜெயகாந்தன் ,செல்வராஜ் ,மயில்சாமி, பாலகிருஷ்ணன், சிடிசி அண்ணா  தொழிற்சங்க செயலாளர் சின்னராஜ் போத்தனூர் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தியாக குமார் ,ரவி ,சுறா வெற்றிக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story