உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.76 ஆயிரம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.76 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம்,மார்ச்
மதுரை பசுமலை-விளாச்சேரி பிரிவு சார்ந்த மூலக்கரை பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி மீனாட்சிசுந்தரம் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை எல்லீஸ் நகரில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம் சோதனை நடத்தியபோது அவர் உரிய ஆவணங்களின்றி ரூ.76 ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வையில் மதுரை கருவூலத்தில் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story