ரிஷிவந்தியம் தொகுதியில் தபால் வாக்கு குறித்து வேட்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம்


ரிஷிவந்தியம் தொகுதியில் தபால் வாக்கு குறித்து வேட்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 26 March 2021 4:40 PM GMT (Updated: 26 March 2021 4:40 PM GMT)

ரிஷிவந்தியம் தொகுதியில் தபால் வாக்கு குறித்து வேட்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் தொகுதியில் தபால் வாக்குகள் குறித்து அனைத்து வேட்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணி தலைமை தாங்கினார். துணைத் தேர்தல் அலுவலர்கள் பாண்டியன், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலர் சுதாகரன் வரவேற்றார். கூட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட 288 பேர், மாற்றுத்திறனாளிகள் 28 பேர் தபால் ஓட்டு அளித்திட விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களின் பெயர் பட்டியல் அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும் வாக்காளர்களின் தபால் வாக்குகளை சேகரிக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்ட விபரம், இந்த குழுவினர் வருகிற 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்களின் இருப்பிடத்துக்கு செல்ல இருப்பது குறித்தும், மேற்கண்ட வாக்காளர்கள் தபால் வாக்கு பதிவு செய்வதை பார்வையிடும் பொருட்டு வேட்பாளர்கள் அல்லது அவரது முகவர்கள் மேற்பார்வையிடலாம் என்பதையும் தெரிவிக்கப்பட்டது.

Next Story