கண்ணகி கோவிலை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு
சித்திரை முழு நிலவு நாள் விழாவையொட்டி கூடலூர் அருகேயுள்ள கண்ணகி கோவிலை சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கம்பம்:
தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமி நாளில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறும்.
இந்த நிலையில் மங்கலதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜகணசேன், முருகன் ஆகியோர் தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், சித்திரை முழு நிலவு நாள் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி நடைபெற உள்ளது.
தற்போது கண்ணகி கோவில் வளாகம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
அந்த செடிகளை அகற்றி, ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும். விழாவிற்கு சுற்றுலாத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தரவேண்டும்.
விழாவுக்கு தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கவேண்டும். ஆண்டுக்கு 24 நாட்கள் கோவிலில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story