கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை பிரித்து வழங்கும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் பிரித்து வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2,298 தெர்மல் ஸ்கேனர், 13,788 (500 மிலி) மற்றும் 22,980 (100 மிலி) கிருமி நாசினி பாட்டில்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 22,980 முககவசங்கள், 1,37,880 மூன்றடுக்கு முககவசங்கள், 57,450 ஓரடுக்கு முககவசங்கள், 68,940 கையுறைகள் வழங்கப்படுகிறது. 11,490 எல்.டி.பி.இ. பேக்கேஜ், 2,298 டி கட் பேக், 15,98,865 பாலிதீன் கையுறைகள், 27,576 பி.பி.இ. உபகரணங்கள் தனித்தனியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு
இந்த கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை தனித்தனியாக பிரித்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடக்கிறது. எனவே, பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் என அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story