வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும்


வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 26 March 2021 11:14 PM IST (Updated: 26 March 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும்

திருப்பூர்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், தேர்தல் செலவின பார்வையாளர் ஷியாம் பிரசாத் ஆகியோர் தலைமையில் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழுக்களுக்கான கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
வேட்பாளர்களின் செலவினங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நிலை கண்காணிப்பு குழுவினர் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். பிரசாரம் வேகமெடுப்பதால் தீவிர கண்காணிப்பில் பறக்கும்படையினர் ஈடுபட வேண்டும். வீடியோ மூலம் அளிக்கப்பட்ட தகவல்களை பதிவேட்டில் முறையாக ஏற்றம் செய்ய வேண்டும். செலவின விவரங்களை வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்ய வேண்டும். பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

Next Story