ரூ.4¾ லட்சம் அபராதம் வசூல்
கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.4¾ லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனோ தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு வட்டார அளவில் இதற்கென மருத்துவ அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசின் நிலையான வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கும், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அனைத்து வட்டாரங்கள் மற்றும் நகராட்சி பகுதிகளையும் சேர்த்து ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தினமும் 15 முதல் 20 தடவை கைகளை சோப்பு கொண்டு நன்றாக கழுவ வேண்டும். அவசிய தேவைக்கு மட்டும் வெளியில் செல்லும் போது முககவசத்துடன் செல்லவேண்டும். பொது மக்கள் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவேண்டும். மேலும் யாருக்கும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story