கோர்ட்டில் ஆஜராகாத 2 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு


கோர்ட்டில் ஆஜராகாத 2 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
x
தினத்தந்தி 27 March 2021 12:24 AM IST (Updated: 27 March 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டில் ஆஜராகாத 2 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை, மார்ச்.27-
ஆவுடையார்கோவில் அருகே பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது30). இவர் தாழ்த்தப்பட்ட வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் பிரகடனப்படுத்தி உள்ளது. அவரை வருகிற 3-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. இதேபோல காந்திநகர் 2-ம் வீதியை சேர்ந்த சரண்குமார் (26) மீது கணேஷ்நகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகமால் இருந்து வருவதால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 30-ந் தேதிக்குள் கோர்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story