மேலூரில் நகைக் கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்


மேலூரில் நகைக் கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 27 March 2021 12:28 AM IST (Updated: 27 March 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் நகைக் கடையில் திருடிய வாலிபர் சிக்கினார்

மேலூர்,மார்ச்.
மேலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து அரை பவுன் மோதிரத்தை திருடிச்சென்று விட்டார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மோதிரம் திருடிய நபரை கடை ஊழியர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இந்த நிலையில் அதே நபர் அதே நகை கடையில் நகை வாங்குவது போல் வந்துள்ளார். சுதாரித்துக்கொண்ட கடை ஊழியர்கள் அந்த நபரை கண்காணித்தனர். ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி நகையை திருட முயன்றபோது அந்த நபரை கையும் களவுமாக பிடித்து மேலூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் ஒத்தக்கடை அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த வெற்றிவேல் (25) என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  அவரை கைது செய்து நகையை மீட்டனர்.

Next Story