கூண்டில் சிக்காமல் டிமிக்கி கொடுக்கும் சிறுத்தை
வால்பாறை சோலையார் எஸ்டேட்டில் கூண்டில் சிக்காமல் சிறுத்தை டிமிக்கி கொடுத்து வருகிறது. எனவே அந்த கூண்டை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வால்பாறை,
வால்பாறை அருகில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்மணி. இவருடைய மகன் ஈஸ்வரன் (வயது 12) அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சிறுத்தை, ஈஸ்வரன் கழுத்தி கடித்து தூக்கிச்செல்ல முயன்றது. அப்போது அங்கு நின்றிருந்தவர்கள் கூச்சலிட்டதால், அந்த சிறுவனை கீழே போட்டுவிட்டு சிறுத்தை தப்பிச்சென்றது.
எனவே அந்த சிறுத்தையை பிடிக்க எஸ்டேட் பகுதி அருகே 2 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. 10 கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்பட்டது. சிறுத்தை கூண்டுக்குள் எளிதில் வர இறைச்சியும் வைக்கப்பட்டது.
ஆனால் கூண்டுகள் வைத்து 8 நாட்கள் ஆகியும் இன்னும் சிறுத்தை பிடிபடவில்லை. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் அந்த சிறுத்தை சிக்காமல் டிமிக்கி காட்டி வருகிறது.
எந்த நேரத்திலும் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வர வாய்ப்பு உள்ளதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
எனவே அந்த கூண்டுகளை வேறு இடத்தில் வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story