ராயபுரம் தொகுதியில் வெற்றி கிடைக்கும் மக்களுக்காகப் பணி செய்ய காத்திருக்கும் தொண்டன் நான் திமுக வேட்பாளர் மூர்த்தி உறுதி
பொறுப்புணர்ச்சியையும், கடமையுணர்ச்சியையும் உணர்ந்து செயல்பட தேர்தல் களத்தில் முழுமூச்சாக இறங்கி இருக்கிறேன்.
சென்னை,
திராவிட முன்னேற்ற கழகத்தில் 1983-ம் ஆண்டில் இருந்து சாதாரண தொண்டனாக இருந்த என்னை, இப்போது ராயபுரம் தொகுதியின் வேட்பாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்தியதை குறித்தும், அதன் பொறுப்புணர்ச்சியையும், கடமையுணர்ச்சியையும் உணர்ந்து செயல்பட தேர்தல் களத்தில் முழுமூச்சாக இறங்கி இருக்கிறேன். அவருக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். கடந்த ஆளும் கட்சியில் பல பதவிகள் வகித்தும் பல முறை ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்றும் ராயபுர தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாதவரை (அமைச்சர் ஜெயக்குமார்) எதிர்த்து இப்போது களம் கண்டு கொண்டிருக்கிறேன்.
நேர்மை அஞ்சாது. எனக்கு அச்சமில்லை. கடமை துஞ்சாது.. ஓய்வில்லாமல் உழைக்க தயாராகி விட்டேன்.
கண்ணியம் கறை படியாது.. என் கண்ணியம் கண்ணாடி மாளிகை. கல் எறிந்தால் அது உடைவதற்கு...
அந்த திராவிட முன்னேற்ற கண்ணியம் இரும்பு கோட்டை.. அதன் உறுதிப்பாடு நிலையானது ..
கட்டுப்பாடு தளராது.. ஆம் நான் தொகுதி மக்களுக்கு கட்டுப்பட்டவன்.. அவர்களின் தேவைகளை அறிந்தவன்..
அவர்களோடு பிறந்து.. அவர்களின் கஷ்ட நஷ்டங்களை பார்த்தவன்.. அதை அறிந்தவன்..
ஆகவே வேறு தொகுதியில் வசித்து தேர்தலுக்காக மட்டும் வாக்காளரை சந்தித்து பாடல் பாடி நடனம் ஆடும் நகைச்சுவை நடிகன் அல்ல... நான் ஒரு சராசரி தொண்டன்.
பதவியில் ஆள்வதற்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிகுந்த கடமை வீரர்களே தேவை. அது என்னிடம் இருக்கிறது.
மக்களின் மனநிலையை புரிந்து கொண்ட, ஒரு அடிப்படை ஆளுமை தேவை..
நான் மக்களோடு மக்களாக அவர்களுக்காக பணி செய்ய காத்திருக்கும் தொண்டன்..
பதவியில் இல்லாத போதே நான் நிறைய சேவையாற்றியதை என் தொகுதி மக்களே அறிவார்கள். ஆகவே இவற்றை நான் சொல்லாமலேயே மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இருட்டில் வாழ்ந்தது போதும் என மக்கள் சூரிய சாட்டையை கையில் எடுத்திருக்கும் காலம் இது.. நிச்சயம் அவர்களுக்கான விடியல் உதய சூரியனால் வரும் .. வந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story