பாளையங்கோட்டை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு


பாளையங்கோட்டை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 27 March 2021 2:15 AM IST (Updated: 27 March 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை போலீஸ் கமிஷனர் அன்பு ஆய்வு செய்தார்.

நெல்லை, மார்ச்:
பாளையங்கோட்டை பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் கமிஷனர் அன்பு ஆய்வு செய்தார்.

போலீஸ் கமிஷனர் ஆய்வு

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து தயார் படுத்தி வருகிறது. கடந்த தேர்தல்களின் போது பிரச்சினைகள் நிலவிய பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை போலீஸ் கமிஷனர் அன்பு ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்தார். நேற்று 2-வது நாளாக பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு நடத்தினார்.

பாளையங்கோட்டை பகுதி

பாளையங்கோட்டை படப்பக்குறிச்சி, பொட்டல், சாந்திநகர், ரகுமத் நகர், கோட்டூர், திம்மராஜபுரம், மேலப்பாளையம் அழகநேரி, குறிச்சி உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆய்வு நடத்தினார்.
அந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், கூடுதல் துணை ராணுவ வீரர்கள், சிறப்பு காவல் படை வீரர்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது மாநகர துணை கமிஷனர் (குற்றம்-போக்குவரத்து) மகேஷ்குமார், உதவி கமிஷனர் ஜான் கிறிஸ்டோபர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story