தென்காசி மாவட்டத்தில் தபால் வாக்குகள் பதிவு செய்த தேர்தல் அலுவலர்கள்


தென்காசி மாவட்டத்தில் தபால் வாக்குகள் பதிவு செய்த தேர்தல் அலுவலர்கள்
x
தினத்தந்தி 26 March 2021 9:16 PM GMT (Updated: 26 March 2021 9:16 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்தனர்.

தென்காசி, மார்ச்:
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று 5 தொகுதிகளிலும் 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்புக்கு பிறகு ஏற்கனவே தபால் வாக்குகளுக்காக படிவங்களை வாங்கி இருந்தவர்கள் அதனை பூர்த்தி செய்து தேர்தல் வகுப்புகள் நடைபெற்ற இடங்களிலேயே பெட்டிகளில் போட்டனர்.
அந்த வகையில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் 1789 வாக்குகளும், ஆலங்குளம் தொகுதியில் 1331 வாக்குகளும், சங்கரன்கோவில் தொகுதியில் 1582 வாக்குகளும், வாசுதேவநல்லூர் தொகுதியில் 1217 வாக்குகளும், கடையநல்லூர் தொகுதியில் 1158 வாக்குகளும் பதிவாகியுள்ளன. இன்னும் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளாதவர்கள் உட்பட பலர் வாக்களிக்க உள்ளனர்.

Next Story