ஏரியூர் அருகே மின் கசிவால் 2 வீடுகள் எரிந்து சாம்பல்
ஏரியூர் அருகே மின் கசிவால் 2 வீடுகள் எரிந்து சாம்பலானது.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஆரல்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் மாது (வயது 50). இவருடைய மகளுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதற்காக அவருடைய 2 வீடுகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இவருடைய வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் வீட்டில் படுத்து இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி அருகில் இருந்த மற்றொரு வீட்டிலும் பிடித்து கொண்டது. அடுத்தடுத்து 2 வீடுகளும் எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த நகை, பணம், ராகி உள்பட துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஏரியூர் போலீசார் விசாரணை நடத்திய போது மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story