மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொடி அணிவகுப்பு
மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய பாதுகாப்பு படையினர் 90 பேர் நீலகிரிக்கு வந்து உள்ளனர்.
அவர்கள் 3 தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நடைபெற்றது. இது ஊட்டி எல்க்ஹில் பகுதியில் இருந்து ரோஜா பூங்கா சந்திப்பு, சாமுண்டி, எட்டின்ஸ் சாலை வழியாக ஏ.டி.சி. வரை நடந்தது. தேர்தல் அமைதியாக, நேர்மையாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்கவும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதில் ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், ஆயுதப்படை போலீசாரும் கலந்துகொண்டனர். தேர்தலையொட்டி நீலகிரியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவ படையினர் 90 பேர் வரவழைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story