காலிங்கராயன் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்தன
ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காலிங்கராயன் வாய்க்கால்
காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வாய்க்காலில் சாய, சலவை பட்டறைகளின் கழிவுகள் கலந்து வருவதாக நீண்ட காலமாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் பேபி வாய்க்கால் அமைக்கப்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர் பேபி வாய்க்கால் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஓடையில் கலந்து பின்னர் காவிரி ஆற்றில் கலந்துவிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.
மீன்கள் மிதந்தன
இந்தநிலையில் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் வாய்க்காலில் குறைவான அளவில் தண்ணீர் செல்கிறது. ஈரோடு வைராபாளையம் பகுதியில் செல்லும் வாய்க்காலில் நேற்று காலை மீன்கள் மொத்தமாக செத்து மிதந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வழக்கமாக மீன் பிடிப்பவர்கள் வாய்க்காலில் இறங்கி, மீன்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “வாய்க்காலில் சாய, சலவை பட்டறைகளின் கழிவுநீர் கலந்து வந்தது. வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளதால், கழிவுநீர் கலந்த பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. பொதுவாக பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்படும்போது இந்த சம்பவம் நடப்பது வழக்கமானது”, என்றனர்.
Related Tags :
Next Story