வளர்ச்சிப் பணி திட்டங்களை கொண்டு வந்தது நான் தான்; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நகர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
x
அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நகர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
தினத்தந்தி 27 March 2021 4:00 AM IST (Updated: 27 March 2021 4:09 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார்.

நேற்று காலை எம்.பி.கே புதுப்பட்டி, திருவள்ளுவர்நகர், தென்றல்நகர், பொன்னகரம், முதுகுடி, கம்மாபட்டி, நெசவாளர்காலனி, வேட்டை பெருமாள் கோவில் உட்பட பகுதிகளில் சமுதாயத் தலைவர்கள், பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து நேற்றுமாலை ஆவாரம்பட்டி, சாலியர்விநாயகர் கோவில், தர்மராஜா பெரியசாவடி அருகில், சின்ன சுரைக்காய்பட்டி, அண்ணாநகர் பிஎஸ்கே பார்க், அம்பேத்கர் சிலை அருகில், மதுரை ராஜா கடைத்தெரு, புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், திருவனந்தபுரம் தெரு, 
சிங்கராஜாகோட்டை, ஜவஹர் மைதானம், லட்சுமியாபுரம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு அமைச்சர் வாக்கு சேகரித்தார். 

அப்போது அமைச்சர் பேசும்போது,

பாட்டாளி, படைப்பாளி, நெசவாளர்களுக்காக உழைக்கும் தொழிலாளர்களுக்காக செயல்படும் ஆட்சியாக அம்மாவுடைய ஆட்சி எடப்பாடியார் ஆட்சி இயங்கி வருகின்றது. உழைப்பை நம்பி பிழைக்கும் 
கூட்டமாக அண்ணா தி.மு.க. இயக்கம் உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதியும் என்னுடைய தொகுதியாக நினைத்துதான் கடந்த 10ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 10ஆண்டுகள் அண்ணா தி.மு.க. ஆட்சியில் உள்ளது, 10 ஆண்டுகள் அமைச்சராக நான் இருக்கின்றேன். ராஜபாளையம் தொகுதி உட்பட விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை நான்தான் கொண்டு வந்துள்ளேன். எங்களுக்கு தெரியாமல் எந்த திட்டங்களும் ராஜபாளையம் தொகுதியில் நிறைவேற்றப்படவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளுக்கும் கடந்த 10 ஆண்டுகளில் 9 கூட்டு குடிநீர் திட்டத்தை நான் கொண்டு வந்துள்ளேன். எல்லா நகராட்சிக்கும் குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளேன். ராஜபாளையம், நகராட்சி, விருதுநகர் நகராட்சி, சாத்தூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை நான்தான் கொண்டு வந்தேன். ராஜபாளையத்திற்கு மட்டும் 2 கூட்டுக்குடிநீர் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். மத்திய, மாநில அரசிடம் நிதி வாங்கி திட்டங்களை தொடங்கி வைத்தது நான்,

சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் என விருதுநகர் மாவட்டத்தில் 4 அரசு கலை அறிவியல் கல்லூரியை நான்தான் கொண்டு வந்துள்ளேன். ராஜபாளையம், திருச்சுழியில் இந்த ஆண்டிற்குள் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைப்பேன். தேர்தல் முடிந்தவுடன் ராஜபாளையம் பகுதியில் உடனடியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.

தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் கல்லூரியை கொண்டு வந்த பெருமை மோடிக்கும், எடப்பாடிக்கும் சேரும். என்னுடைய முயற்சியால் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு மெடிக்கல் கல்லூரி கொண்டு வந்துள்ளேன். அண்ணா தி.மு.க. ஆட்சியில்தான் திட்டங்களை கொண்டுவர முடியும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தேர்தல் அறிக்கையில் மிக்சி, கிரைண்டர், பேன் கொடுப்பேன், தாலிக்கு தங்கம் கொடுப்பேன், விலையில்லா சைக்கிள் கொடுப்பேன் என்று ஜெயலலிதா கூறினார்கள்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி அனைவருக்கும் கொடுத்தார்கள் தங்கத்தை வெட்டி எடுக்கும் பெல்ஜியம் நாட்டில் கூட ஒரு கிராம் தங்கம் இலவசமாக கொடுக்கவில்லை. ஆனால் தாலிக்கு தங்கம் வழங்கிய ஆட்சி புரட்சித்தலைவி அம்மா ஆட்சி. வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என்று இன்று எடப்பாடியார் சொல்லியிருக்கின்றார். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் எடப்பாடியார் நிச்சயமாக செய்து கொடுப்பார். ஒரு நடுத்தர குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் போதும். குடும்பத் தலைவிக்கு வாஷிங் மெஷின் கண்டிப்பாக தேவை. அதையும் எடப்பாடியார் வழங்குவார். விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்வேன் என்று எடப்பாடியார் கூறினார். ரத்து செய்தார்.

கடவுள் இருக்கின்றார் என்று நம்புகின்றவன் தப்பு செய்ய பயப்படுவான். கடவுளே கிடையாது என்று கூறுபவன் தப்பு செய்ய தயங்க மாட்டான். எங்களை பொறுத்தவரையில் எல்லா மதமும் சம்மதம்தான் தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு தக்க பாடம் புகட்டுவேன்.ராஜபாளையத்தில் தங்கி நான் பணியாற்றுவேன். வெற்றி பெற்ற பின்பு எனது பணி முழுவதும் ராஜபாளையம் தொகுதிக்குள்தான் இருக்கும். ஆன்மீக பூமி, பொதிகை மலை காற்று பொங்கி வரும் அழகிய தொகுதியாகும். கொரோனா வந்த காரணத்தினால் பாதாள சாக்கடை, கூட்டுக்குடிநீர் திட்டம், சாலை அமைக்கும் திட்டங்களின் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2 மாதத்தில் அனைத்து 
பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.

கொரோனா காலங்களில் ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒன்றிய அலுவலகத்திற்கும் மாவட்ட கலெக்டர், சுகாதாரதுறை அதிகாரிகளுடன் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டேன். இவ்வாறு அவர் 
பேசினார்.

Next Story