டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
4-ந் தேதி முததல் 6-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமறை
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 6-ந் தேதி வாக்குப்பதிவு மற்றும் மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை வருகிற 4-ந் தேதி காலை 10 மணி முதல் வருகிற 6-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மற்றும் மே மாதம் 2-ந் தேதி முழுவதும் மூடப்படும். மதுபானங்கள் விற்பனை செய்வது நிறுத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story