வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்; அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி வாக்குறுதி
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்ைத கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி வாக்குறுதி அளித்துள்ளார்.
வாக்கு சேகரிப்பு
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மேலவீதி, கீழவீதி, தெற்கு வீதி, மருவத்தூர், காந்திநகர், நெய்க்குப்பை, அட்டைகுளம், நயினார்தோப்பு, கீழத்தெரு, அண்ணா நகர், ரெயில்வே ரோடு, மயிலாடுதுறை சாலை, பட்டவர்த்தி சாலை, என்பன உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி.பாரதி இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பொதுமக்களிடம் கூறுகையில் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வார சந்தை கட்டிடம், வேளாண் விரிவாக்க மையம் அலுவலக வளாகத்தில் விதை சேமிப்பு கிடங்குகள், குடிநீர், சாலைகள், தெருவிளக்கு என்பன உள்ளிட்ட எண்ணற்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
பாதாள சாக்கடை திட்டம்
மீண்டும் என்னை வெற்றி பெற செய்தால் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒருவழிப்பாதை அமைத்து தருவேன். வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை மேற்கொள்வேன். சொந்தம் இடம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் பட்டா இடம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
தெருத் தெருவாக சென்று...
அப்போது மாவட்ட துணை செயலாளர் செல்லையன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், பேரூர் கழக செயலாளர் போகர் ரவி, பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் வெங்கடேசன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகி செந்தில் முருகன், பேரூர் கழக செயலாளர் தில்லை கண்ராஜ், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், பால் கூட்டுறவு சங்க தலைவர் அஞ்சம்மாள், துணைத் தலைவர் பார்த்தசாரதி, ஒன்றிய துணை செயலாளர் திருமாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருள்குமார் உள்பட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து செம்பனார்கோவில்
ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம், ஆளவெளி, சேமங்கலம், பாகசாலை, கொண்டத்தூர் ஆகிய ஊராட்சிகளில் தெருத் தெருவாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி. பாரதி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story