ஸ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூரில் மசூதிகளில் தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி வாக்குசேகரிப்பு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பழனியாண்டி அதனைத்தொடர்ந்து அம்மாபேட்டை, நவலூர் குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, அரியாவூர், சேதுராப்பட்டி, ஆலம்பட்டிபுதூர், இனாம் குளத்தூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து இனாம் குளத்தூரில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்ட அவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறினார். மாநிலத்தில் சிறுபான்மையினர் கல்வி அடிப்படையிலும், பொருளாதார அடிப்டையிலும், பின் தங்கியுள்ள பகுதிகளில் குறிப்பாக சிறுபான்மை சமுதாய பெண்கள் பயனடையும் வகையிலும் சிறப்பு சலுகைகளும் உடன் கல்வி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
வக்பு வாரியத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படும் என கூறி வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story