மண்டல அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி
மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன கூட்டரங்கில் நடந்தது.
வண்டலூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட புத்தாக்க பயிற்சி வகுப்பு மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன கூட்டரங்கில் நடந்தது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார்.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும், தேர்தல் நடைமுறைகளை பற்றியும், மண்டல அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றும் முறை குறித்தும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், இயலாதவர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு அளிப்பது, முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 207 மண்டல அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story