திருக்கோவிலூர் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்


திருக்கோவிலூர் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 27 March 2021 9:41 PM IST (Updated: 27 March 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்றயநல்லூர் பகுதியில் முகையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாம்ராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் விருத்தாசலம் தாலுகா மேலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் ரூ.62 ஆயிரம் பணம் வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். விசாரணையில் அவர் வியாபாரி என்பதும் ஓசூர் அருகே காய்கறி வாங்கி வர செல்ல இருந்ததும் தெரியவந்தது. 

மற்றொரு பறிமுதல் அதேபோல் அவ்வழியாக வந்த மற்றொரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வந்த டி எடையார் கிராமத்தைச் அருள்பிரகாஷ்(40) ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் வைத்திருந்தார். ஆனால் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பிரபு, அருள்பிரகாஷ் ஆகியோரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்தை பறிமுதல் செய்து அதை திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

Next Story