சாத்தனூர்; பறையப்பட்டு ஏரி நிரம்பி வழிந்து கோடி போனது


சாத்தனூர்; பறையப்பட்டு ஏரி நிரம்பி வழிந்து கோடி போனது
x
தினத்தந்தி 27 March 2021 9:42 PM IST (Updated: 27 March 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

சாத்தனூர் அணையில் இருந்து திறந்துவிட்ட தண்ணீரால் பறையப்பட்டு ஏரி நிரம்பி கோடி போனது.

வாணாபுரம்

சாத்தனூர் அணையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்தத் தண்ணீர் இடதுபுற கால்வாய் வழியாக ஏரிகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது. மேலும் குடிநீர் தேவைக்காக அவ்வபோது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

தற்போது அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஏரிகளில் தண்ணீர் அதிக அளவில் நிரம்பி காணப்படுகிறது. 

வாணாபுரம், மழுவம்பட்டு, குங்கிலியநத்தம் ஆகிய ஏரிகளில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. 

இந்த நிலையில் பறையம்பட்டு ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து அங்குள்ள மதகு வழியாக கோடி போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருவதால் விவசாயிகள் தங்களின் நிலங்களில் பயிர் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.

Next Story