கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான வாக்குச்சாவடி ஊழியர்கள் தபால் வாக்கு பதிவு செய்யும் பணி தொடக்கம்
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடங்கியது.
கும்மிடிப்பூண்டி,
வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டு உள்ள 405 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 1,784 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் எல்.இ.டி. திரை மூலம் நேற்று கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுரு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மகேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி மையத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்காக தனித்தனியே தபால் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
விண்ணப்பங்களை பெற்று கொண்ட அரசு அலுவலர்கள், அதனை பூர்த்தி செய்து நீண்ட வரிசையில் காத்திருந்து தாங்கள் வசித்து வரும் தொகுதியில் போட்டியிடும் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு ஓட்டினை பதிவு அதற்குரிய தபால் வாக்கு பெட்டியில் போட்டனர்.
இதனையொட்டி அந்த தனியார் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தபால் ஓட்டை பதிவு செய்திட வந்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டது. வாக்குச்சாவடிகளுக்கான அதிகாரிகள் தபால் ஓட்டு போட்ட இந்த நிகழ்வில் அனைத்து கட்சி முகவர்களும் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story