வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேலூர்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தேர்தல் காவல் பார்வையாளர் மாயங்க் ஸ்ரீவஸ்தவா, கலெக்டர் சண்முகசுந்தரம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் 733 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவர்கள் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 648 இடங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் நேரடியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story