நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்
நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
நாகப்பட்டினம்:
நாகை அமரநந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அமரநந்தீஸ்வரர் கோவில்
நாகையில் அமரநந்தீஸ்வரர், அபீத குஜாம்பாள் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 23-ந்தேதி வசந்த உற்சவமும், 24-ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 10.30 மணிக்கு தேரில் சாமி எழுந்தருளினார். தொடர்ந்து 10.45 மணியளவில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ‘தியாகேசா’ என பக்தி கோஷம் எழுப்பினர்.
இன்று (ஞாயிற்றுகிழமை) தீர்த்தவாரி உற்சவமும், நாளை 29-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பூமிநாதன், தக்கார் மணவழகன், அமர நந்தீஸ்வரர் திருத்தொண்டர் சபையினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story