விக்கிரவாண்டி தொகுதியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுகளை பெற்ற அதிகாரிகள்


விக்கிரவாண்டி தொகுதியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று  தபால் ஓட்டுகளை பெற்ற அதிகாரிகள்
x
தினத்தந்தி 27 March 2021 10:41 PM IST (Updated: 27 March 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுகளை அதிகாரிகள் பெற்றனா்.

விக்கிரவாண்டி, 

தமிழக சட்டமன்ற தேர்தலிலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. இந்த நிலயில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவும் காரணத்தினால், தேர்தல் ஆணையம் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தபால் ஓட்டுகளுக்கு அனுமதித்துள்ளது. அதன்படி தற்போது தபால் ஓட்டுகள் பெறும் பணி நடந்து வருகிறது. 

 இதில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 2,33,901.  இதில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோர் என 605 பேர் தபால் ஓட்டுகள் போடுவதற்கு தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு நேற்று முதல் நேரடியாக அவர்களது வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகள் பெறப்பட்டு வருகிறது. இதற்கென 6 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

.விக்கிரவாண்டியில் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் திருமலை தாத்தாச்சாரி தலைமையில் மேற்பார்வையாளர் கனரா வங்கி கார்த்திக், சர்வேயர் வேல்முருகன், போலீஸ்காரர் அய்யனாா் கிராம உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டிபேரூராட்சியில் பழைய போஸ்ட் ஆபீஸ் வீதியில் 96 வயதான மூதாட்டி சாவித்திரி என்பவரிடம் அதிகாரிகள் வீடியோ பதிவுடன் தபால் ஓட்டுகளை சேகரித்தனர்.

 இதேபோல் விக்கிரவாண்டி மற்றும் தொகுதி முழுவதிலும் உள்ள தபால் ஓட்டுகளை அதிகாரிகள் பெற்றனர்.

Next Story