ராணிப்பேட்டை; மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி


ராணிப்பேட்டை; மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி
x
தினத்தந்தி 27 March 2021 10:42 PM IST (Updated: 27 March 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகள் சேகரிக்கும் பணியை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தொகுதியில் 20 மாற்றுத் திறனாளிகளும், 104 மூத்த குடிமக்களும், சோளிங்கர்  தொகுதியில் 87 மாற்றுத்திறனாளிகளும், 187 மூத்த குடிமக்களும், ராணிப்பேட்டை தொகுதியில் 21 மாற்றுத்திறனாளிகளும், 64 மூத்த குடிமக்களும், ஆற்காடு  தொகுதியில் 43 மாற்றுத்திறனாளிகளும், 158 மூத்த குடிமக்களும் உள்ளனர். 

ஆக மொத்தம் 171 மாற்றுத் திறனாளிகளும், 513 மூத்த குடிமக்களும் என 684 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வழங்கப்பட்ட தபால் வாக்குகளை சேகரிக்க தேர்தல் குழுக்கள் அமைக்கப்பட்டு, தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியினை  கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அவர் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தபால் வாக்குகளை சேகரிக்க மொத்தம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் சேகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைப்பார்கள். 

அங்கு பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், பூட்டி சீல் வைத்து, காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கப்படும் என்றார். 

Next Story