விழுப்புரம் மாவட்டத்தில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க காவல்துறையின் சிறப்புக்குழு தீவிர வாகன சோதனை


விழுப்புரம் மாவட்டத்தில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க காவல்துறையின் சிறப்புக்குழு தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 27 March 2021 11:05 PM IST (Updated: 27 March 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க காவல்துறையின் சிறப்புக்குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ கொடுத்து வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்காக அவற்றை வாகனங்களில் எடுத்துச்செல்வார்கள்.

இதனை கண்காணித்து தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படை குழுக்களும், ஒரு தொகுதிக்கு ஒரு குழு வீதம் 7 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிர வாகன சோதனை

இந்நிலையில் தேர்தல் நெருங்கி வருவதால் பல இடங்களில் அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன. 

இதையடுத்து அரசியல் கட்சியினர், பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், போலீசார் அடங்கிய 7 சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்த பிறகே செல்ல அனுமதித்து வருகின்றனர்.

Next Story