ஆ.ராசாவின் உருவ படத்தை செருப்பால் அடித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்
ஆ.ராசாவின் உருவ படத்தை இந்து மக்கள் கட்சியினர் செருப்பால் அடித்து போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், பெண்களையும் இழிவாக பேசிய ஆ.ராசா எம்.பி, திண்டுக்கல் லியோனி ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். தொடர்ந்து, ஆ.ராசாவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், உருவ படத்தை கிழித்தும் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முதல்-அமைச்சரையும், பெண்களையும் இழிவாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதுகுறித்து இந்து மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story