வால்பாறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு


குடிநீர் தட்டுப்பாடு
x
குடிநீர் தட்டுப்பாடு
தினத்தந்தி 27 March 2021 11:07 PM IST (Updated: 27 March 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வால்பாறை,

வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட உருளிக்கல் எஸ்டேட் அருகில் பெரியார் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழாய் மூலம் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.

 இதனால் பெரும்பாலான நேரங்களில் எஸ்டேட் பகுதி வழியாக பாய்ந்தோடும் நீரோடைகள் மற்றும் நீரூற்றுகளில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்து காய்ச்சி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது வால்பாறை பகுதியில் கோடைவெயில் சுட்டெரிக்கிறது. இதனால் நீரோடைகள் மற்றும் நீரூற்றுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதுகுறித்து பெரியார் நகர் பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கு நீண்ட தொலைவில் உள்ள குடிநீர் தொட்டிகளில் இருந்து குழாய்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் அழுத்தம் குறைந்து, குடிநீர் வினியோக அளவு குறைந்து விடுகிறது.

இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை தவிர்க்க நீரோடைகள் மற்றும் நீரூற்றுகளில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்து காய்ச்சி குடிநீராக பயன்படுத்துகிறோம்.

 ஆனால் கோடை காலத்தில் அவை வறண்டு விடுவதால், மீண்டும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதை தீர்க்க வால்பாறை நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 


இதற்கிடையில் பெரியகடை பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி யில் இருந்து குழாய்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அங்கிருந்து இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 

எனவே எங்கள் பகுதிக்கு தனியாக தொட்டி கட்டி, அதிலிருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
----------------

Next Story