செஞ்சி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
செஞ்சி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அருகே உள்ளது நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமம். இந்த கிராம மக்களுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 வாரமாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதோடு தற்போது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க குழாய் பதிக்கும் பணியும் கிராமத்தில் நடந்து வருகிறது. இவ்வாறு வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதன் மூலம் குறைந்த அளவிலேயே தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி நேற்று நல்லான்பிள்ளை பெற்றாள் கிராம மக்கள் அந்த பகுதியில் செஞ்சி-வேட்டவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் விரைந்த வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் குடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story