மணப்பாட்டில் போலீசார்-துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
மணப்பாட்டில் போலீசார்-துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.
உடன்குடி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி, குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணப்பாடு பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
இந்த அணிவகுப்பு மணப்பாட்டில் உள்ள பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி ஏ.கே.லேம்கான், திருசெந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட போலீசார், அசாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story