பழனியில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெள்ளி தேரில் முத்துக்குமாரசாமி உலா
பழனியில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வெள்ளி தேரில் முத்துக்குமாரசாமி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவைெயாட்டி நேற்று முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதைத்தொடர்ந்து திருமண கோலத்தில் முத்துக்குமார சாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி தேரில் எழுந்தருளினார்.
முன்னதாக இரவு 9 மணிக்கு திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் வெள்ளி தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் தேர் உலா நடைபெற்றது.
தேர் உலாவை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழுத்தலைவர் அப்புகுட்டி, அறங்காவலர்கள் செல்லமுத்தையா, கமலக்கண்ணன், லதாஸ்ரீதர், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, சித்தனாதன் சன்ஸ் தனசேகர், பழனிவேல், கார்த்தி, கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் செந்தில், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.
வெள்ளி தேர் சன்னதி வீதி, வடக்கு, கிழக்கு, மேற்கு கிரிவீதி வழியாக இரவு 11 மணிக்கு நிலை வந்து சேர்ந்தது. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story