கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் சாவு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை, மார்ச்.28-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் சாவு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்தது.
16 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் பட்டியல் தினமும் சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஒரிரு நாட்களாக இரட்டை இலக்க எண்ணில் தொற்று உறுதி பதிவாகி வருகிறது.
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் மருத்துவமனையில் இருந்து நேற்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 591 ஆக உயர்ந்துள்ளது.
2 பேர் பலி
இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த 65 வயது பெண் ஒருவர், 57 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்று பாதித்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் தற்போது 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story