பழனிக்கு காவடி தூக்கிச்சென்ற பாதயாத்திரை பக்தர்கள்
பழனிக்கு காவடி தூக்கிச்சென்ற பாதயாத்திரை பக்தர்கள்
பல்லடம்,
முருக கடவுளுக்கு கொண்டாடப்படும் பங்குனி உத்திரதிருவிழா மிகவும் புகழ் பெற்றது. திருவிழாவின் போது பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, மலர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் பழனிமலையில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று பல்லடம் பகுதிகளிலிருந்து காவடிகள் எடுத்து பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரையாக சென்றனர்.
Related Tags :
Next Story