ஓவிய ஆசிரியர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


ஓவிய ஆசிரியர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 March 2021 12:42 AM IST (Updated: 28 March 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

க.பரமத்தி அருகே மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் ஓவிய ஆசிரியர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

க.பரமத்தி
ஆசிரியர் மனைவி தற்கொலை
க.பரமத்தி அருகே உள்ள ஆதிரெட்டிபாளையம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர் தோகைமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (31). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் மணிமேகலையின் கணவர் பிரகாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வருடமாக 2 பேரும் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர். மீண்டும் பிரகாசுக்கும், அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்தது.  இதனால் நேற்று காலை கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதனையடுத்து மதியம் 2 மணிக்கு மணிமேகலை வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டார். நேற்று மாலை 5 மணி ஆகியும் கதவு திறக்காததால் பிரகாஷ் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது அவர் தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை 
இதுகுறித்து க.பரமத்தி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்- இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.    பின்னர் மணிமேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story