புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
அருப்புக்கோட்டையில் புகையிலை பொருட்கள் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து போலீசார் காசுகடை பஜார், பெரியகடை பஜார், சந்திவீரன் கோவில் தெருவில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர். இதில் 756 கிலோ எடைகொண்ட ரூ.2 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து புகையிலை பொருட்களை விற்ற கடை உரிமையாளர்கள் ராஜேந்திரன் (வயது44), கண்ணன் (46), முத்து முருகன் (34), நவநீதன்(34), பாக்கியராஜ் (52), சிவராமன் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story