இரு கட்சியினர் மீது வழக்கு


இரு கட்சியினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 March 2021 12:44 AM IST (Updated: 28 March 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் அனுமதியின்றி பட்டாசு வெடித்ததால் இருகட்சியினர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் கடந்த 26-ந்தேதி அன்று பிற்பகலில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர் தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக ெதரிகிறது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் சிங்கம்புணரி தி.மு.க.நகர செயலாளர் யாகூப் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதே போல கிருங்காக்கோட்டையில் 26-ந்தேதி இரவு அ.ம.மு.க வேட்பாளர் உமாதேவன் தேர்தல் பிரசாரம் செய்த போது பட்டாசு வெடிக்கப்பட்டது. இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் கிருங்காக்கோட்டை ஊராட்சி செயலாளர் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story