கடைகள்-வீடுகளில் கிருமி நாசினி தெளிப்பு


கடைகள்-வீடுகளில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 28 March 2021 12:44 AM IST (Updated: 28 March 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

கடைகள்-வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நொய்யல்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் கொரோனா தொற்று ஆங்காங்கே பரவாமல் இருப்பதற்காக கரூர் மாவட்டம் புதுகுறுக்குபாளையம் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் அப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடை, மளிகை கடை மற்றும் வீடுகள், தெருக்களின் இருபுறங்களிலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளித்தனர். அதேபோல் அப்பகுதியில் கொசுத் தொல்லையை ஒழிக்கும் விதமாக புகை மருந்து அடிக்கப்பட்டது.


Next Story