அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை


அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 28 March 2021 12:52 AM IST (Updated: 28 March 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே அ.தி.மு.க.பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மதுரை வருமானவரித்துறை அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர் மற்றும் பறக்கும் படை தாசில்தார் மயிலாவதி தலைமையிலான குழுவினரும் அவரது வீடு மற்றும் அதன் பின்புறமுள்ள தோட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை. இதனால் அவர்கள் திரும்பிச் சென்றனர். வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story