பெருங்களூர் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்


பெருங்களூர் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
x
தினத்தந்தி 28 March 2021 12:58 AM IST (Updated: 28 March 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

பெருங்களூர் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.

ஆதனக்கோட்டை, மார்ச்.28-
ஆதனக்கோட்டை அருகே பெருங்களூர் கிராமத்தில் மங்களநாயகியம்மன் கோவில் பின்புறம் குளம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் குளிப்பதற்காக பொதுமக்கள் வந்தனர். அப்போது, குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைகண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். யாராவது குளத்துக்குள் விஷத்தை ஊற்றியதால் மீன்கள் செத்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க அச்சம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் வெயிலுக்கு இந்த மீன்கள் செத்து இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story