ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து 4 தொகுதிகளிலும் தலா 3 பறக்கும்படை, 3 நிலைத்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ராமநாதபுரம் காவல் துணை கோட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாடானை காவல் துணை கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் காவல் துணை கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆகமொத்தம் 3 காவல் துணை கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8 லட்சத்து 28 ஆயிரத்து 440 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.