தயார் நிலையில் 916 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்


தயார் நிலையில் 916 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 28 March 2021 1:37 AM IST (Updated: 28 March 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் தொகுதியில் தயார் நிலையில் 916 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம்,மார்ச்.28-
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையில் 2-வது பெரிய தொகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதி அமைந்துள்ளது. நகரம் மற்றும் கிராமங்கள் அதிகம் சார்ந்த இந்த தொகுதியில் 458 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. இத்தொகுதியில் 23 பேர் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஆகவே 458 வாக்குச்சாவடிகளுக்கு 916 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளது. அவசர கால வசதிக்காக கையிருப்பாக 184 மின்னணு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்பட 5 பேர் வீதம் 458 வாக்குச்சாவடிகளுக்குமாக 2,290 பேர் பணியாறற உள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படக்கூடிய மின்னணு எந்திரங்களில் வருகிற 31-ந்தேதி அகர வரிசைப்படி வேட்பாளர்கள் முன்னிலையில் சின்னங்கள், பெயர்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரி, உதவி அலுவலர்களான தாசில்தார்கள் மூர்த்தி, அனிஸ், சத்தார், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Next Story