பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 March 2021 1:45 AM IST (Updated: 28 March 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் சீராக வினியோகிக்காததால், பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கருங்கல், 
குடிநீர் சீராக வினியோகிக்காததால், பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
குடிநீர் வினியோகம்
பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மேல குறும்பனை பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் சப்ளை செய்யப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. 
முற்றுகை
எனவே சீராக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து குறும்பனை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
இந்த போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த ஹெலன்மேரி, ஜெனோபா, தாம்சன், ஜாக்சன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story