கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
x

கமுதி அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாமங்கலத்தை சேர்ந்த குமரவேல் (வயது 58), தத்தனேரியை சேர்ந்த குமார்(42) ஆகிய இருவரும் அபிராமம் சப்பானி கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக அபிராமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story