சரக்கு ஆட்டோவில் ஏற்றி வரப்பட்ட வைக்கோல் கம்பிகளில் சிக்கியதில் மின்கம்பம் சாய்ந்தது


சரக்கு ஆட்டோவில் ஏற்றி வரப்பட்ட வைக்கோல் கம்பிகளில் சிக்கியதில் மின்கம்பம் சாய்ந்தது
x
தினத்தந்தி 28 March 2021 1:57 AM IST (Updated: 28 March 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு ஆட்டோவில் ஏற்றி வரப்பட்ட வைக்கோல் மின்கம்பிகளில் சிக்கியதில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தான் வளர்க்கும் மாடுகளுக்காக தா.பழூர் பகுதியில் இருந்து வைக்கோல் வாங்கி சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சுந்தரேசபுரம் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். சுந்தரேசபுரத்தில் ஒரு வளைவு பகுதியில் திரும்பியபோது சரக்கு ஆட்டோவில் உயரமாக ஏற்றப்பட்டிருந்த வைக்கோல், சாலையின் குறுக்காக மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மீது சிக்கியது. இதனால் மின்கம்பம் கீழே சாய்ந்தது. ஆனால் வைக்கோல் தீப்பற்றாததாலும், வாகனத்தில் மின்சாரம் பாயாததாலும் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story