முதல்-அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி; 7 பேர் கைது


முதல்-அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி; 7 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2021 2:05 AM IST (Updated: 28 March 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் முதல்-அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாங்குநேரி, மார்ச்:
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தச்சை கணேசராஜாவை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாங்குநேரி பஸ்நிலையத்தில் பிரசாரம் செய்தார். அப்போது வன்னியருக்கு ஒரு தலைபட்சமாக உள் ஒதுக்கீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீர்மரபினர் நலச்சங்கத்தினர் முதல்-அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றனர். தகவல் அறிந்ததும் அவர்களை போலீசார் நாங்குநேரி டோல்கேட்டில் தடுத்து நிறுத்தினர். அதன் பின் சீர்மரபினர் நல சங்கத்தினர் அங்கேயே கருப்புக்கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக சங்கத்தின் மாநில பொருளாளர் தவமணி தேவி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story