உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1½ கோடி பறிமுதல்


உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1½ கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 28 March 2021 2:40 AM IST (Updated: 28 March 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1½ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை குழு, வீடியோ கண்காணிப்பு குழு, நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்பவர்களிடம் இருந்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 
ரூ.1½ கோடி பறிமுதல்
அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.38 லட்சத்து 8 ஆயிரத்து 900-ம், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 610-ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 600-ம், பெருந்துறை தொகுதியில் ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 750-ம், பவானி தொகுதியில் ரூ.13 லட்சத்து 13 ஆயிரத்து 500-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.9 லட்சத்து 20 ஆயிரத்து 310-ம், கோபி தொகுதியில் ரூ.22 லட்சத்து 22 ஆயிரத்து 600-ம், பவானிசாகர் (தனி) தொகுதியில் ரூ.30 லட்சத்து 71 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 கோடியே 51 லட்சத்து 2 ஆயிரத்து 270 பறிமுதல் செய்யப்பட்டது.
மதுபானம் பறிமுதல்
இதில் 55 வழக்குகளில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.84 லட்சத்து 45 ஆயிரத்து 970 திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.66 லட்சத்து 56 ஆயிரத்து 300 கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் 800.9 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 118 ஆகும். இவற்றை உதவி ஆணையாளர் (கலால்) மூலம் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story